Christian Democracy

கிறிஸ்துவ ஜனநாயகம்

தமிழ் விளக்கம்

கிறிஸ்தவ ஜனாயகம் என்பது ஜுடோ - கிறிஸ்தவ மதக் கோட்ப்பாடுகளும், முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாடுகளும் இணைந்த ஒரு அரசியல் கோட்பாடு. இது முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாட்டை ஆதரித்தாலும் தனிமனித வாதத்தையும் (தனி மனிதனின் தனிச் செயலுரிமையை ஆதரிக்கும் சமுதாயக் கொள்கை), அரசின் தலையிடாக் கொள்கையையும் அரசின் தாராளவாதத்தையும் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. புறக்கணிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி அரசு பலதளங்களில் தலையிடவேண்டும் என்று கூறினாலும், பொதுவுடமை வாதிகளைப்போன்று மட்டற்ற அரசுத் தலையீட்டையும் ஏற்றுக்கொள்வதில்லை, முதலாளித்துவ - பொதுவுடமைக் கோட்பாடுகளுக்கு இடைநின்று, முற்போக்கான சமூகநலம் பேணும் அரசியல் செயல்பாட்டை வற்புறுத்தும் அரசியல் இயக்கமாக, ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில், அந்தந்த நாடுகளின் தேவைக்கேற்ப செயல்படுகிறது.

English

A political movement and philosophy that espouses traditional Judeo–Christian religious values in combination with the social values of capitalism. The philosophy is the foundation of the Christian Democrat parties that are particularly influential in Germany and Italy.