chromosomal disorders

உடல் அணுக்களில் காணப்படும் மரபுக்காரணிகளின் கட்டமைப்பால் ஏற்படும் மரபியல் நோய்

தமிழ் விளக்கம்

குரோமோசோம்கள் (இனக்கீற்று, இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூற்றின் உயிர் அணுககோல், பண்புக் காரணித் தொகுப்பு) தவறாகக் கட்டமைக்கப்பட்டதாலும், தவறான எண்ணிக்கை இருப்பதாலும் ஏற்படும் கோளாறு. 15 வயதிற்குக் குறைவான, 35 வயதிற்கு அதிகமான பெண்கள் கருவுறும்போது, குரோமோசோம்கள் இயல்பு வழி விலகுவதால், கருச்சிதைவு, சிசு மரணம், குழதை இறந்தே பிறப்பது, பிறவிக்குறைபாடுகள், மனவளர்ச்சிக் குறைபாடு (Down's syndrome) போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.

English

A type of genetic disorder resulting from faulty structure or incorrect numbers of chromosomes. These chromosome aberrations can cause miscarriage, stillbirths, neonatal death, congenital abnormalities, and Down's syndrome. Women younger than 15 and older than 35 have greater chances of giving birth to children with chromosomal disorders.