chronic fatigue syndrome

நாள்பட்ட சோர்வு நோய்க்குறி

தமிழ் விளக்கம்

நாள்பட்ட சோர்வு நோய்க்குறி (CFS) என்பது பெரியவர்களிடம் ஆறுமாதம் வரை தொடர்ந்தோ, சிறுவர்களிடம் மூன்றுமாதம் வரை தொடர்ந்தோ அறியப்படும் களைப்பு / அயர்ச்சி / ஆயாசம் / தசைச்சோர்வு தொடர்புள்ள பலவீனமான பல மருத்துவ நிலைகளைக் குறிக்கும் பொதுச் சொல்லாடல். எதுவும் செய்யாமலே ஆரோக்கியமான, செயலூக்கம் கொண்ட நபர் ஒருவருக்குக் கடும் உழைப்பிற்கு பின் ஏற்படும் உடல்நலக்குறைபாடு, புத்துணர்ச்சியற்ற தூக்கம், தசை மற்றும் மூட்டு வலி, புலனுணர்வுச் சிரமங்கள், தொண்டைப்புண், இதுவரை அனுபவித்தறியாத தலைவலி, ஒளி, ஒலி, வாசனை அழற்சி, கண்கூச்சம், நிற்கும் போது தள்ளாடுதல், ஜீரணக் கோளாறுகள், மனச் சோர்வு, சுவாசம் மற்றும் இருதயக் கோளாறுகள், வலியுள்ள நிணநீர்க்கட்டிகள் போன்ற அறிகுறிகள் தென்படும்.

English

A physical disorder characterized by excessive and prolongued lethargy, low energy, sleepiness, and apathy, often accompanied by psycho-social problems such as depression, anxiety, vocational difficulties, and family conflict. See also chronic fatigue immune dysfunction syndrome (CFIDS).