cirrhosis

கல்லீரலில் இழைநார் வளர்ச்சி, கடினத்தன்மை, மது அருந்துவதால் ஏற்படும் ஈரலரிப்பு

தமிழ் விளக்கம்

உடல் உறுப்புகளில் முக்கியமானது கல்லீரல். வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால் கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகிறது. ஆனால் மது அருந்துவோருக்கு கல்லீரல் கரணை எனும் உயிருக்கு உலை வைக்கும் நோய் உண்டாகிறது. இது நோய்க் கிருமிகளால் உண்டாவது அல்ல. முழுக்க முழுக்க மது அருந்துவதால் மட்டுமே ஏற்படுவது. மதுவை ஜீரணித்து (உடைத்து) உடலிலிருந்து வெளியேற்றுவது கல்லீரல். தினமும் தொடர்ந்து மது பருகினால் கல்லீரலின் இந்த வேலைப்பளு அதிகமாகி அதன் செல்கள் சோர்வுற்று அழிவுக்கு உள்ளாகின்றன. அந்தப் பகுதியில் தழும்புகள் (scars) நிறைந்துவிடுகின்றன. இதனால் கல்லீரல் தன் வேலையைச் செய்ய இயலாததாகிவிடுகிறது. இவ்வாறு தழும்புகளால் சுருங்கிப்போன கல்லீரலைக் கரணை நோய், ஈரல் இறுக்கி நோய் அல்லது ஆங்கிலத்தில் Cirrhosis Liver என்று அழைக்கிறோம். இதனால் கல்லீரல் செயலிழந்துபோய் (Liver Failure) மரணம் நேரிடுகிறது. மற்றொரு விதத்திலும் இந்தத் தழும்புகள் பாதிக்கின்றன. இவற்றால் கல்லீரலில் உள்ள இரத்தக்குழாய்கள் அழுத்தப்பட்டு இரத்தவோட்டம் தடைப்பட்டு, பின்னோக்கிச் சென்று கழுத்துப் பகுதி இரத்தக் குழாய்கள் புடைத்து வெடிக்க நேரிடும். அதனாலும் உயிர் போகலாம்.

English

The scarring of body tissue, most commonly the liver. Those most susceptible to cirrhosis are middle-age men with a nutritional (protein) deficiency brought about by alcoholism. The damage to the liver may result in such symptoms as emaciation, jaundice, gastrointestinal disturbances, hepatitis, enlargement of the liver and spleen, and distension of the veins. Treatment usually includes a diet with adequate protein, vitamin supplements, and sometimes blood transfusions and excess fluid removal.