citizen participation
மக்கள் பங்கேற்பு
தமிழ் விளக்கம்
பல நிலைகளில், பல தளங்களில் குறுகிய மற்றும் விரிவான பொருளைத் தரக்கூடிய வார்த்தை. அரசின் கொள்கை வடிவமைப்பிலும், சட்டமியற்றுவதிலும், திட்டமிடலிலும் மற்றும் இவை எல்லாவற்றையும் செயல்படுத்துவதிலும் பொதுமக்கள் பங்கேற்பதை இந்த வார்த்தை வலியுறுத்துகிறது, சமூகப்பணியாளர்களும், சமுதாய அமைப்பாளர்களும் தங்களுடைய செயல்பாடுகளில் மக்கள் பங்கேற்பிற்கு எப்போதும் ஊக்கமளித்து வந்துள்ளனர். பங்கேற்பில் பலவிதமான நிலைகளை அறிஞர்கள் முன் வைக்கின்றார்கள் பங்கேற்பு முறைகள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தபட்டுள்ளன. 1.மக்கள் பங்கேற்பது மாதிரியான சூழலை உருவாக்குதல் (Manipulative participation) 2. சாம்பிராதயமான, மந்தமான உயிர்ப்பற்ற பங்கேற்பு (Passive participation) 3. கலந்தாலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பது (Participation by consultation), 4. பொருள் வெகுமதிகளைப் பெற பங்கேற்பது (Participation for material incentives), 5. செயலில் பங்கேற்பது (Functional participation) 6. பணியமைப்பில், செயல்பாட்டில் பங்கேற்பு (Interactive participation) 7. தன்னிச்சையாக அணிதிரண்டு பங்கேற்றல் (Self-mobilization). இந்தப்படிநிலைகள் கீழிருந்து மேலாக உயரஉயர மக்கள் பங்கேற்பு அர்த்தமுள்ளதாகவும், அழுத்தமுடையதாகவும் மாறுகின்றது
English
Involvement of members of the general public who are likely to be affected by a changed social policy, law, or circumstance in the process of planning and implementing that change. Community organizers usually attempt to facilitate citizen participation in change efforts. Many laws dealing with the public welfare (such as Title XX of the Social Security Act) require citizen participation in the development and implementation of certain social services plans. Some social workers identify various types of citizen participation, including agencies or bureaucracies that initiate the involvement and those in which citizen groups and individuals themselves initiate the involvement.