city planning
நகரத் திட்டமிடல்
தமிழ் விளக்கம்
நகரத் திட்டமிடல் என்பது, நகர்ப்புறங்கள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் கட்டிடம் மற்றும் சமூகச் சூழல்கள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் பற்றி ஆராய்கின்ற நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் துறை ஆகும். 19 ஆம் நூற்றாண்டில், நகரத் திட்டமிடல், புதிதாக முறைப்படுத்தப்பட்ட கட்டிடக்கலை (architecture), குடிசார் பொறியியல் (civil engineering) ஆகியவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டு, நகரப் பிரச்சினைகளுக்குப் பௌதீக வடிவமைப்பு மூலம் தீர்வு காண்பதற்கான அணுகுமுறைகளை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தது. 1960 ஆண்டிற்குப் பின், நகரத் திட்டமிடல் துறை, பொருளியல் வளர்ச்சித் திட்டமிடல் (urban economic development), நகரச் சமூகத் திட்டமிடல் (Urban Social planning), சூழல்சார் திட்டமிடல் (environmental planning) என்பவற்றையும் உள்ளடக்கி விரிவடைந்தது. இது கட்டிடக்கலை, சூழல் திட்டமிடல், நிலத்தோற்றக் கலை, இடஞ்சார் திட்டமிடல் (Spatial planning), தாங்குதிறன் வளர்ச்சி (sustainable development), போக்குவரத்துத் திட்டமிடல் (transport planning), நகர்ப்புற வடிவமைப்பு (urban design), வலயப்படுத்துதல் (zoning regulations), நகர்ப்புறப் புத்தமைப்பு (Urban renewal) போன்றவற்றை உள்ளடக்கியது. நகரத் திட்டமிடல் என்பது சமூகத்தின் பொருளாதார, சமூக, பண்பாட்டு மற்றும் சூழலியல் கொள்கைகளைப் புவியியல் அடிப்படையில் இடஞ்சார் திட்டமிடல்லாக வெளிப்படுத்தும் அறிவுத்துறையாக பரிணமித்துள்ளது. அத்துடன் இது ஒரு அறிவியல் துறையாகவும், நிர்வாக நுட்பமாகவும், பரந்த உத்தியின் அடிப்படையிலான இட ஒழுங்கமைவையும், சமநிலைப் பிரதேச வளர்ச்சியையும் (balanced regional development) நோக்கமாகக் கொண்ட பல்துறைசார்ந்து உருவாக்கப்பட்ட ஒரு கொள்கையாகவும் இருக்கிறது.
English
Systematic efforts to order urban development; establish priorities; and implement goals pertaining to the overall well-being of a city, town, neighborhood, or metropolitan region. City planners were originally oriented toward the physical development of a city, including development of its infrastructure and aesthetic amenities. Later, their objectives expanded to include developing sound land-use patterns, improving governmental procedures, and enhancing the quality of life and welfare of citizens.