civil contempt
நீதிமன்ற (குற்ற இயல் சாராத) அவமதிப்பு
தமிழ் விளக்கம்
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைப் பின்பற்றாதிருக்கும் நிலை. நீதிமன்றம் குறித்த சிகிச்சை முறைகளுக்காக, சமூகப்பணியாளரிடம் சென்று சிகிச்சை பெறுவதில் ஆர்வம் காட்டாதது, விவாகரத்தின் போது குழந்தைகளின் தொடர் பராமரிப்பிற்காக நீதிமன்றம் கொடுத்த வழிகாட்டுதல்களை ஏற்று நடக்காதது போன்ற செயல்கள் சமூகப் பணியில் நீதிமன்ற அவமதிப்பாகப் பொதுவாக கருதப்படுகிறது.
English
A form of contempt of court that occurs when an individual fails to follow a court order, such as not making regular child support payments or not appearing for scheduled meetings with a social worker for court-ordered therapy.