civil disorder
பொது இடையூறு, உள்நாட்டுக் குழப்பம்
தமிழ் விளக்கம்
குழப்பம், கலாட்டா, பதற்றம், கிளர்ச்சி என்று காவல் துறையால் வகைப்படுத்தப்படும் அமைதியற்ற சூழ்நிலை. சமூகப் பொருளாதார நிகழ்வுகளின் மீது அதிருப்தி கொண்ட மக்களோ அல்லது ஒரு சிறிய குழுவோ தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்ட அனுமதியில்லாமல் கூட்டம் போடுவது, ஊர்வலம் செல்வது, உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்வது, மறியலில் ஈடுபடுவது, கலவரம் மற்றும் நாச வேலைகளில் ஈடுபட்டுப் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பது, வன்முறையில் ஈடுபட்டு உயிர்களுக்கு ஆபத்து உண்டாக்குவது, பொது அமைதிக்குப் பங்கம் விளையுமாறு நடந்து கொள்வது போன்ற செயல்பாடுகள்.
English
A public disturbance in which a group is involved in violent activity causing danger, injury, or property damage to others.