civil liberties
குடி உரிமைகள்
தமிழ் விளக்கம்
குடி உரிமை அல்லது குடிமைச் சுதந்திரம் என்பது மனித உரிமைகளோடு சம்பந்தப்பட்டது என்றாலும், குடி உரிமைகள் என்பது ஒரு நாடு தனது அரசியல் சாசனச் சட்டத்தின்படி அந்த நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகள். மனித உரிமைகள் மனிதர்களுக்கெல்லாம் பொதுவாக உலகம் தழுவியது. குடி உரிமைகள் அந்தந்த நாடு சார்ந்தது என்றாலும் அது மனித உரிமைகளைத் தழுவியே இருக்கும். இந்திய அரசியல் சட்டம், அரசியல் சாசன சட்டத்தின் மூலம் அடிப்படை உரிமைகளையும் (Fundamental Rights) குடிஉரிமைகளையும் (Civil Liberties) உத்தரவாதப்படுத்தி உள்ளது. அதன்படி கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை (ஒருவர் தாம் சொல்ல விரும்பும் கருத்தை அச்சமின்றி வெளிப்படுத்தும் உரிமை), சுதந்திரமாகக் கூட்டம் கூடும் உரிமை (சட்டத்திற்கு உட்பட்டு), இயக்கங்களைக் கட்டி எழுப்பும் உரிமை, வாக்களிக்கும் உரிமை (18 வயதிற்கு நிரம்பியவர் தான் விரும்புகின்ற நபருக்கு வாக்களிக்க உரிமை), வாழ்வுரிமை (பிறந்த இடத்தில் வசிக்க வழங்கப்பட்டுள்ள உரிமை). சித்திரவதை செய்யப்படுவதிலிருந்து சுதந்திரத்திற்கான உரிமை (இன்னல்கள் ஏற்படும் பொழுது அதிலிருந்து மீள உரிமை), சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படும் உரிமை (பாமரக் குடிமகன் முதல் முதல் குடிமகன் வரை சமமாக நடத்தப்படும் உரிமை), பாகுபாட்டிற்கு எதிரான உரிமை (சாதி, மதம், இனம், மொழி ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான உரிமை), தேசியத்தைச் சார்ந்திருக்கும் உரிமை (எந்த மதத்தில் பிறந்தவராக இருந்தாலும் பிறந்த தேசத்தை சார்ந்திருக்க உரிமை) போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
English
Certain freedoms that may not arbitrarily be taken away or denied by society or external authority. The freedom to act according to one's own conscience; to worship, speak, and travel without restriction; and to choose one's own profession or associates are examples of civil liberties.