civil rights
குடி உரிமைகள்
தமிழ் விளக்கம்
குடி உரிமை அல்லது குடிமைச் சுதந்திரம் என்பது மனித உரிமைகளுக்குள் அடங்கிய ஒன்று. குடி உரிமை என்பது எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். இந்த உரிமைகள் 'மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாகக்' கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல், உளவலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமுகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நடமாட்டச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை.
English
Rights of citizens to be protected against discrimination or arbitrary treatment by government or individuals and to engage in certain behaviors as long as they do not infringe on the rights of others. In the United States, these rights include those guaranteed in the Constitution's Bill of Rights (such as freedom of speech, religion, and the press) and others instituted since the adoption of the Bill of Rights (such as due process and equal protection under the law). Several civil rights acts and constitutional amendments have sought to bestow specific protections on African Americans and other racial and ethnic groups. This legislation includes such acts as the Civil Rights Act of 1964, the Voting Rights Act of 1965, and the 1968 housing acts designed to eliminate discrimination in housing and real estate. See also civil liberties.