Civilian Conservation Corps (CCC)
இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான மக்கள் பாதுகாப்புக் குழு, குடிமுறைப் பாதுகாப்புக் குழு (குடி மராமத்து)
தமிழ் விளக்கம்
ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது ஏற்பட்ட பொருளாதார மந்தத்தினால் ஏராளமானோர் வேலைவாய்ப்பு இல்லாமலிருந்ததால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ளவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்டதுதான் குடிமுறைப் பாதுகாப்புத் தொண்டரணி (குடி மராமத்து). இது இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் / பாராமரிக்கும் பணியில் வேலைற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் தந்து நாட்டின் இயற்கை ஆதாரங்களை முறையாகப் பேண வழிவகுத்தது. இந்தத் தொண்டரணி மூலமாகவே அமெரிக்காவின் மிகப் பெரிய தேசியப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, பாராமரிக்கப்பட்டு, இன்று நாட்டின் தேசிய அடையாளச் சின்னங்களாகி இருக்கின்றது..
English
A federal program established in 1933 to conserve and develop U.S. natural resources and create jobs for unemployed young men. The program, abolished in 1942, was used in part as a model for the 1964 Job Corps program.