classical conservatism

பழையனவற்றை காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளல்

தமிழ் விளக்கம்

ஒரு சமூகம் காலம்காலமாக பின்பற்றிப் பயனடைந்த வழிமுறைகளை அழித்துவிட்டு நிரூபிக்கபடாத புதிய வழிமுறைகளுக்கும், நிறுவனங்களுக்கும் அங்கீகாரம் அளிப்பதை விட, பழைய வழிமுறைகளில் சுட்டிக்காட்டப்படும் குறைகளைக் களைந்து, அதைக் காலத்திற்கேற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற கோட்பாடு. பிரெஞ்சுப் புரட்சியின் மீதான தன் கருத்துக்களைச் சொல்லவந்த எட்மண்ட் பர்க் (1729–1797) என்ற இங்கிலாந்து தத்துவ அறிஞர், மாற்றங்கள் சாசுவதமானவையாக இருக்கவேண்டுமென்றால் அது சற்று மெதுவாகவே முன்னெடுக்கப்படவேண்டும் என்று எடுத்துரைத்தார்.

English

The sociopolitical ideology that tends to prefer the status quo or only minimal, incremental changes in social institutions. The British philosopher Edmund Burke (1729–1797), who in 1790 wrote Reflections on the Revolution in France, was among the first thinkers to systematically delineate the tenets of this ideology by advocating that society should conserve the best institutions of the past and slowly blend them into the needs of the present, rather than destroy and replace them with untested social innovations. This ideology is not synonymous with neoconservatism.