classical liberalism

தனிமனித சுதந்திரத்தையும், அளவான அரசுக் கட்டுப்பாடுகளையும் வலியுறித்திய தாராளவாதம்

தமிழ் விளக்கம்

தனிமனித சுதந்திரத்தையும், அளவான அரசுக் கட்டுப்பாடுகளையும், சுதந்திரமான பொருளாதார அமைப்பையும், மனித உரிமைகள் என்பது சுயாதீனமானதென்றும் (அரசின் விருப்பங்களுக்கு அப்பாற்பட்டது) எடுத்துரைத்த அரசியல் சமூகக் கோட்பாடு. இக்கோட்பாடு மகாசாசனம் உருவான காலகட்டத்தில் (பிரிட்டனில் ஜான் என்ற மன்னரிடமிருந்து 1215-இல் மக்கள் சார்பில் பெறப்பட்ட அரசியல் உரிமைப்பத்திரம்) உருவாகி, பின் ஜான் லாக் (1632-1704) மற்றும் தாமஸ் ஜெபர்சன் (1743-1826) போன்ற அறிஞர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. இந்தத் தாராளவாத சித்தாந்தம் பலநாடுகளில், 1688-1789 முடிய அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது. பல அரசுகள் குடி உரிமைகளைச் சாசுவப்படுத்தின. 'நல்ல அரசுக்கு அடையாளமே அதன் குறைந்த பட்ச அதிகாரமே' (“government that governs least governs best”) என்ற கருத்து அப்போதைய பல அரசாங்கங்களின் அணுகுமுறையை மாற்றின. .

English

The sociopolitical ideology that originally promoted personal freedom and limited government control, a free-enterprise system, and a belief in human rights that are inherent and independent of the state. This philosophy was developing during the time of the Magna Carta in 1215 and was further delineated by political philosophers such as John Locke (1632–1704) and Thom-as Jefferson (1743–1826). Classical liberalism influenced many national revolutions, especially during the period 1688 to 1789, and the establishment of many governments that had detailed bills of rights. The liberal view that “government that governs least governs best” began to change at the beginning of the 20th century. The emerging view, now most commonly called neoliberalism, was that individual freedom is mitigated by poverty and inequal opportunity and that government is the suitable vehicle to overcome these wrongs.