classification
செய்திகளை, தரவுகளை வகைப்படுத்தல்
தமிழ் விளக்கம்
- வகைப்படுத்தல் என்பது ஒத்த பண்புள்ளவற்றை (மனிதர்கள், பொருட்கள், கருத்துக்கள்) ஒரு குறிப்பிட்ட நோக்குக்காக ஒரு வகைக்குள் அல்லது பகுப்புக்குள் சேர்த்தல் ஆகும். வகைப்படுத்தல் பொருட்களை அல்லது கருத்துக்களை அடையாளப்படுத்தி, வேறுபடுத்திப் புரிந்து கொள்ள உதவுகிறது. தரவுகளை அல்லது தகவல்களை வகைப்படுத்தும்போது அதைப் பகுப்பாய்வு செய்யவும், புரிந்துகொள்ளவும் உதவும். உதாரணமாக சமூகப்பணியாளர்கள் தங்களுடைய பணியெல்லைப் பரப்பிலிருக்கும் மக்களை, வயது, கல்வி, பாலினம், பொருளாதார நிலை, நோய்கள் போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தி வைத்திருந்தால் அந்த மக்களுக்கு இன்னும் சிறப்பான சேவைகளைச் செய்யமுடியும்.
English
The process of organizing information into categories or classes so that the data can be more readily analyzed and understood. For example, a social worker might plan for the needs of potential clients in the agency's catchment area by categorizing the area's population by age, gender, economic well-being, recent hospital intakes, and incidence and type of mental illness.