clemency
அருளிரக்கம், தயவு, எளிதிற் பிழைபொறுக்கும் தன்மை, தயை, இரக்க உணர்வு, மென்னயப்பு.
தமிழ் விளக்கம்
ஒரு அரசின் தலைமைப் பொறுப்பில் (ஜனாதிபதி, மன்னர்) உள்ளவரோ, ஒரு நாட்டின் பாராளுமன்றமோ அல்லது சமயத் தலைவரோ, ஒருவரின் குற்றத்தையோ, அந்த குற்றத்திற்கான தண்டனையையோ ரத்து செய்து மன்னித்து விடுதலை செய்வது. இது குற்றத்தை முழுமையாக மன்னிப்பது, குற்றத்தின் சில செயல்களை மட்டும் மன்னிப்பது, குற்றத்தை மன்னிக்காமல் தண்டனைக்காலத்தை மட்டும் குறைப்பது, தண்டனையை (குறிப்பாக மரணதண்டனையை) ஒத்திவைப்பது, தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய அனுமதிப்பது போன்ற பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இது தனிநபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ கொடுக்கப்படலாம்.
English
An official grant issued by a nation's chief executive that forgives an individual for any liability or punishment for specified criminal acts. Clemency differs from amnesty in that it applies to specific crimes and people rather than classes of people. See also pardon.