client dumping

வாடிக்கையாளரை நிர்க்கதியாய் விட்டுவிடுவது

தமிழ் விளக்கம்

தொடர்ந்து உதவியோ, வழிகாட்டலோ வாடிக்கையாளருக்குத் தேவைப்படுமென்று தெரிந்திருந்தும், வாடிக்கையாளரின் பிரச்சனைகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லையென்று தெரிந்திருந்தும், வாடிக்கையாளர்களின் பொருளாதார நிலையாலோ, குறிப்பிட்ட நிலைக்குமேல் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து தங்களுக்கான சேவைக்கட்டணத்தைப் பெறமுடியாதென்று தெரியவரும் நிலையில், தங்களுடைய சேவையை நிறுத்திக்கொள்ளும் சமூகப்பணியாளர் மற்றும் பிற நிபுணர்களின் நெறியற்ற தொழில் அணுகுமுறையைக் குறிக்கும் சொல். தங்களுடைய சேவையை நிறுத்திக்கொள்வதை மிக நாசூக்காக மூன்று வழிகளில் வெளிப்படுத்துவர். 1. வாடிக்கையாளர் எதற்காகத் தங்களிடம் வந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டதென்று சொல்லி சேவையை நிறுத்திக்கொள்வது. 2. தன்னைவிட இன்னார் மிகச் சரியான சேவையை வழங்க முடியுமென்று கூறி, பிறரிடம் கைகாட்டிவிட்டு சேவையை நிறுத்திக்கொள்வது 3. நியாமற்ற பரிந்துரைகளை வழங்கி அதன்படி வாடிக்கையாளரால் நடக்கமுடியாத பட்சத்தில், தாங்கள் செய்த பரிந்துரைகளின்படி வாடிக்கையாளர் நடந்துகொள்ளவில்லை என்று சொல்லி சேவையை நிறுத்திக்கொள்வது.

English

A term used to depict the unethical practice by some social workers and other professionals of discontinuing services to clients who are still in need. Premature termination of service occurs most commonly because the client's financial resources or insurance benefits have diminished. The three principal ways professionals terminate services without revealing to the client or others their motivation for termination include (1) telling the client that goals have been reached; (2) referring the client to another service provider on the premise that only the other has the skills necessary to meet the client's need; or (3) making unreasonable demands, changes, or recommendations and then ending treatment when the client does not comply.