client self-monitoring
வாடிக்கையாளரே சுயமாகத் தங்களை கண்காணித்துக்கொள்வது
தமிழ் விளக்கம்
சமூகப்பணி தொழிலாற்றுதலிலும், ஆய்வுகளிலும் சமூகப்பணியாளரின் சாம்பிராதயமான பேட்டிகள், பார்வையிடல் தவிர்த்த பிற நேரங்களில் வாடிக்கையாளர்களையோ, ஆய்வுப் பரிசோதனைக்கு உட்பட்டவர்களையோ, அவர்களின் எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை முறையான மதிப்பீட்டுக் கருவிகளைப் பயன்படுத்தி குறிக்கச் சொல்லும் முறை. இந்த முறையில் குறிப்பிட்ட நடத்தையோ, எண்ணங்களோ எவ்வப்பொழுது தோன்றுகிறது என்பதை நாட்குறிப்பாகவோ, சரிபார்க்கும் பட்டியலில் குறியிடவோ, பதிவேட்டில் குறித்துவைக்கவோ சமூகப்பணியாளர் கேட்டுக்கொள்வதுண்டு. இந்த மாதிரியான வாடிக்கையாளர்களின் சுயகண்காணிப்பில், துணையாதரவாளர்களின் (collateral) கண்காணிப்பையும் இணைத்துக் கொள்வது இன்னும் பயனுள்ளதாயிருக்கும்.
English
A procedure used by social workers in direct practice and research to measure client behavior and behavioral changes by having clients note their own behaviors outside the interviews using systematic procedures and assessment tools. Typically, the social worker has the client maintain a diary, checklist, or log to check the frequency of specified behaviors. Client self-monitoring seems most effective when used in conjunction with collateral monitoring.