client system
வாடிக்கையாளர் தொகுதி / அமைப்பு, பிரச்சனைக்குள்ளானவரும் அவரின் சூழலும்
தமிழ் விளக்கம்
ஒரு வாடிக்கையாளரும், வாடிக்கையாளரைச் சுற்றியுள்ளவர்களும் வாடிக்கையாளர் தொகுதி என்றழைக்கப்படுவர். உதாரணமாக ஒரு தனிக்குடும்பத்தை (மையக்கருக் குடும்பம், ஒரு கரு உருவாகக் காரணமான தந்தை, அல்லது அந்த கருவைச் சுமந்த தாய் இருவருக்கும் பிறந்த குழந்தைகளைக் கொண்ட குடும்பம்) வாடிக்கையாளராகக் கொண்டால், உறவினர் வட்டம் (extended family), அண்டை வீட்டார், அக்குடும்பக் குழந்தைகளின் ஆசிரியர் மற்றும் அக்குடும்பப் பெரியவர்களைப் பணிக்கமர்த்திய முதலாளிகள் போன்ற பலரும் வாடிக்கையாளர் தொகுதி என்றழைக்கப்டுவர்.
English
The client and those in the client's environment who are potentially influential in contributing to a resolution of the client's problems. For example, a social worker may see a nuclear family as the client and the extended family and neighbors, teachers, and employers as making up part of the client system.