cliff effect
தகுதி இழப்பு, சலுகை விலக்கம்
தமிழ் விளக்கம்
குறிப்பிட்ட வருமானத்திற்கு மேல் வருமானமீட்டும்போது நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் நிலை. இதனால் வரையறுக்கப்பட்ட வருமானத்திற்குள் வருமானமீட்டவே நலத்திட்டப் பயனாளிகள் விரும்புகின்றனர். தங்களுக்குக் கிடைக்கும் பொருளாதார மற்றும் மருத்துவ உதவிகளை இழக்காமல் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு அதிக வருமானமீட்டலில் ஆர்வம் காட்டாமல், சமூக நலத் திட்டங்களைச் சார்ந்திருக்கக் கற்றுக்கொள்கிறார்கள். இதற்கு மாற்றாக நலத்திட்ட உதவிகளைச் சட்டென்று நிறுத்தாமல், அதைப் படிப்படியாகக் குறைக்கும் முறையைச் (benefit rate reduction (BRR) சிலர் பரிந்துரைக்கின்றார்கள்.
English
The abrupt termination of eligibility of some social benefits once the client's earnings have reached a certain point. Making one more dollar causes loss of all benefits. This often results in clients striving to keep any income below that point. Many public-assistance administrators point out that people become trapped in the public assistance cycle by fear of losing all their economic and medical benefits under this system and thus recommend more gradual reductions. However, other administrators claim the alternative is the benefit rate reduction (BRR), which also has disincentives.