clinical social work

நோய் சார்ந்த / பிணி சார்ந்த சமூக பணி

தமிழ் விளக்கம்

சமூகப்பணியில் பிணி சார்ந்த (நோய் சார்ந்த / இயலாமை சார்ந்த) சிகிச்சைக்கான (நிவாரணம் / தீர்வு) சிறப்புத் தொழில்முறை. இதைத் தனிமனிதர்களோடும், குழுக்களோடும், குடும்பங்களோடும் சமூகப்பணியாளர்கள் அப்பியாசிக்கின்றார்கள். நோய்சார்ந்த சமூகப்பணியென்பது, சமூகப்பணியின் கோட்பாடுகளையும் அணுகுமுறைகளையும் கையாண்டு, சமூக உளவியல் செயலின்மையால் ஏற்படும் உணர்ச்சி மற்றும் உளக்கோளாறுகளுக்குச் சிகிச்சையளிக்கவும், அதைத் தடுக்கவும் உபயோகப்படுத்தப்படும் முறை என்று NASW விளக்குகிறது. இதைச் சமூகத் தனியாளர் பணி (social case work), உளப்பிணி சமூகப்பணி என்பதற்கு இணையாகப் பொருள்கொண்டாலும், அம்முறைகளிலிருந்து வேறுபட்டது என்றும் சொல்லப்படுகிறது. இது மற்ற எந்த சமூகப்பணி முறையைவிடவும், மனிதரை அவரின் சூழலில் பொருத்திப் பார்த்து புரிந்துகொள்வதை அதிகமாக வலியுறுத்துகிறது என்று சொல்லப்படுகிறது.

English

A specialized form of direct social work practice with individuals, groups, and families. The National Association of Social Workers (NASW) has defined clinical social work as the professional application of social work theory and methods to the treatment and prevention of psychosocial dysfunction, disability, or impairment, including emotional and mental disorders. Some professional social workers use the term as a synonym for social casework or psychiatric social work, although others believe that each of these terms has a somewhat different meaning. Most professional social workers agree that clinical social work practice includes emphasis on the person-in-environment perspective. See also methods in social work.