clinician

சிகிச்சை மருத்துவர், சிகிச்சையாளர்

தமிழ் விளக்கம்

அலுவலகத்திலோ, மருத்துவ மனையிலோ, சிகிச்சையகத்திலோ, அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வைத்தோ, இயலாமையைக் (நோய் சார்ந்த) கையாளும் / சிகிச்சையளிக்கும் தொழிமுறை. தன்னிடம் வருபவர்களின் பிரச்சனையைப் புரிந்துகொண்டு, அதன் நோய்க்குறிகளை மதிப்பீடு செய்து, அதிலிருந்து நிவாரணம் பெற நேரடியாகவே சிகிச்சை அளிக்கும் முறை. சமூகப்பணியில், சமூகப்பணியாளர் அவருடைய அலுவலகத்தில் வைத்தே (தனி நபர்கள், குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கான) சிகிச்சையளிக்கும் செயல்முறையைச் செய்வார்கள்.

English

A professional, working directly with clients, whose practice occurs primarily in an office, hospital, clinic, or other controlled environment. In such settings, the practitioner studies the problem, assesses and diagnoses the client situation, and directly treats or helps the client to achieve prescribed goals. The social work clinician is generally one who provides direct treatment to the client (individual, family, or group), usually in the social worker's office.