closed-ended questions
கருத்துக்களுக்கோ, கற்பனைக்கோ இடமாளிக்காமல் துல்லியமான பதில்களைப் பெறஉதவும் கேள்விகள்
தமிழ் விளக்கம்
ஒரு வாடிக்கையாளர் / பேட்டி அளிப்பவர் உள்ளது உள்ளவாறான, சுருக்கமாக, கற்பனை கலவாமலும், தன்னுடைய அபிப்பிராயத்தைக் கலவாமலும் பதில் சொல்லும்படியாகக் கேள்விகளை வடிவமைப்பது. பேட்டிக்கான கால அவகாசம் குறைவாக இருக்கும்போது, தேவையற்ற செய்திகளை இடையில் கூறும் போக்கை தவிர்க்கவும், மழுப்பலான பதில்களைக் கூறவிடாமலும், பொருத்தமில்லாத் தகவல்களைக் கூறவிடாமலும் கேட்கப்படும் கேள்விகள். இப்படிக் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் பெரும்பாலும் ஆம் அல்லது இல்லை என்ற ஒற்றை வார்த்தையில் பதிலைப் பெறுவதாக அமையும்.
English
Questioning designed to encourage the client to reveal specific information concisely and factually, without opinion, embellishment, or detail. Such questions are usually posed by the social worker to keep the client from digressing, evading, or providing irrelevant information when interview time is limited. Such questions are frequently answered “yes” or “no” or with one-word responses. Examples of closed-ended questions are “Did you go to school every day this week?” and “When did you lose your job?” See also open-ended questions.