CNSW
சிறுநீரகவியல் சமூகப் பணியாளர் கவுன்சில்
தமிழ் விளக்கம்
சிறுநீரகவியல் என்பது ஆண் மற்றும் பெண்களின் சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாய்கள் மற்றும் ஆண்களின் இனப்பெருக்க மண்டலம் போன்றவற்றில் ஏற்படும் குறைகளைத் தகுந்த சிகிச்சை முறையில் குணமாக்குவதில் ஈட்டுபாடுள்ள மருத்துவத் துறையாகும். இத்துறை நிபுணர்கள் ‘யூராலஜிஸ்ட்’ என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் சிறுநீரகம் தொடர்பான நோய்களைக் கண்டறிந்து, அதற்கு சிகிச்சை அளித்து குணமாக்கும் பயிற்சி பெற்றிருப்பார்கள். சிறுநீரகவியலில், சிறுநீரகம், சிறுநீர்க் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்வடிகுழாய் மற்றும் ஆண் இனப்பெருக்க உறுப்புகள் (பிராஸ்டேட் சுரப்பிகள், ஆணுறுப்பு, விரைப்பை) ஆகியவற்றைப் பற்றி முழுமையாகக் கற்கலாம். சிறுநீரகவியல் துறையானது, புற்றுநோயியல் (ஆன்காலஜி), பெண்களுக்கு ஏற்படும் நோய்களைப் படிக்கும் கைனகாலஜி, ஆண்மையியல் எனப்படும் ஆன்ட்ராலஜி, குழந்தை மருத்துவம், இரைப்பையியல் எனப்படும் கேஸ்டிரோ என்டிராலஜி மற்றும் நாளமில்லா சுரப்பியியல் எனப்படும் என்டோகிரைனாலஜி ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சிறுநீரகவியல் நோய்கள் தொடர்பாகச் சிகிச்சை பெறுபவர்களுக்கு அவர்களுக்கு வந்திருக்கும் நோயை விளக்கிச் சொல்லவும், நோயை ஏற்றுக்கொள்ளச் செய்யவும், அதற்கான ஆலோசனைகளைச் சொல்லி நோயாளிகளை பயத்திலிருந்து விடுவிக்கவுமான பணியில் சிறுநீரகவியல் சமூகப்பணியாளர்கள் செயல்படுவார்கள்.
English
See Council of Nephrology Social Workers (CNSW).