co-optation
இணைத்துக்கொள்ளுதல், எதிர்ப்பைச் சமன் செய்ய எதிர்ப்பாளர்களில் ஒருவரை உறுப்பினராக ஏற்றுக்கொள்ளுதல், எதிர்ப்பாளர்களின் கருத்தை தனதாக்கிக் கொள்ளல்
தமிழ் விளக்கம்
ஒன்றின் (நிறுவனம் அல்லது அதன் செயல்பாடுகள்) மீது தொடுக்கப்படும் விமர்சனத்தை, எதிர்ப்பைக் குறைக்கவோ, நீர்த்துபோக வைக்கவோ, எதிர்ப்பாளர்களையே அந்நிறுவன செயல்பாட்டுக் குழுவில் இணைத்துக்கொள்வது. அக்குழுவோடு இணைந்த பின் அக்குழுவின் செயல்பாடுகளைப் பொதுவெளியில் அவரால் விமர்சிக்க இயலாது போய்விடும். ஏற்கனவே எதிர்ப்பாளர்களால் தூண்டப்பட்ட உறுப்பினர்களும், ஆதரவற்று நிறுவனத்தில் தனித்து விடப்பட எதிர்ப்பும், விமர்சனமும் நீர்த்துப் போகும்.
English
A strategy for minimizing anti-cipated opposition by absorbing or including the opponent in the group's membership. Once a member of the group, the opponent has less ability to criticize the program in public. Opposition within the organization is also less effective because the person is in the minority. The term is also used to indicate any election of a person or group into another group's membership.