coalition
செயற் கூட்டுறவு, மக்கள் குழுக்கள் தத்தம் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமலே சில நோக்கங்களுக்காக ஒன்றாக இணைதல்
தமிழ் விளக்கம்
தனிநபர்களோ, இருவேறு கொள்கைப் பற்றுள்ள குழுக்களோ ஒரு பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது ஒரு குறிக்கோளை அடையவோ தற்காலிகமாக அமைத்துக் கொள்ளும் கூட்டணி. சமுதாய அமைப்புப் பணியாளர்கள் சில குறிக்கோள்களையடைய செல்வாக்குள்ள நபர்களைக்கொண்ட கூட்டணியையோ அல்லது அதிகாரமற்ற குழுக்கள் மேலும் அதிகாரம் பெரும் பொருட்டோ கூட்டணிகளை அமைப்பதுண்டு. இது தற்காலிகமானதாகவோ (குறிக்கோள் நிறைவேறியவுடன் கலைந்து விடும்), நிரந்தரமானதாகவோ இருக்கலாம்.
English
An alliance of various factions or ideological groups in a society brought together to achieve a goal. In community organization, social workers often attempt to form such alliances among influential groups or among less-powerful groups to increase their influence. Coalitions may be ad hoc (organized to address a specific goal or single issue and expected to disband when it is achieved), semipermanent (more formally organized around broader and longer-range goals), or permanent (such as political parties). See ad hoc coalition.