cocaine

கோகோயின், ஓரிடத்தில் இருக்கும் வலியுணர்ச்சியைப் போக்கும் மருந்து

தமிழ் விளக்கம்

கோகோயின் (Cocaine benzoylmethylecgonine பென்சாயில் மெத்திலெகோனைன்) என்பது கோகோ தாவர இலைகளில் இருந்து பெறப்படும் தூள் வடிவ வெண்மை நிற உப்பாகும் “கோகோ” என்ற பெயருடன் சேர்ந்து அல்கலாய்டு துணைப் பெயரான -ine என்பது சேர்ந்து கோகோயின் என்ற வார்த்தை உருவாகியது. இது மத்திய நரம்பு மண்டலத்தின் கிளர்ச்சியூட்டியாக இருப்பதுடன் பசி அடக்கியாகவும், நன்னிலையுணர்வு, ஆற்றல், உஷார்நிலை, நம்பிக்கை, உச்சபட்சமான உணர்திறனை அளிப்பதாகவும் உள்ளது. இது பல்வேறு முறைகளில், வாய்வழியாகவும், கோகோ இலைச் சாறாகவும், மூக்கு வழி உறிஞ்சியும், ஊசிவழியாக உட்செலுத்தியும், இன்ஹேலேஷன் (புகைஉறிஞ்சுதல்) மூலமும் பயன்படுத்தப்படுகிறது. பல நாடுகளில், கோகோயின் பிரபலமான உற்சாக மருந்தாக இருக்கிறது. ஏறக்குறைய உலகின் அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவம் சாராத நோக்கங்களுக்கு அல்லது அரசு ஒப்புதலின்றி இதனை வைத்திருப்பது, வளர்ப்பது மற்றும் விநியோகம் செய்வது சட்டவிரோதமாக இருக்கிறது. ஏறக்குறைய எல்லா நாடுகளிலும், இதனை சுதந்திர வர்த்தகமயமாக்குவது சட்டவிரோதமானதாகவும் கடுமையான தண்டனைக்கு உரியதாகவும் இருந்த போதிலும், உலகளாவிய அளவில் இதன் பயன்பாடு பல்வேறு சமூக, கலாச்சார, மற்றும் தனிநபர் அந்தரங்க மட்டங்களில் பரந்துபட்டதாய் இருக்கிறது.

English

A drug of abuse derived from the leaves of the coca plant that gives the user feelings of euphoria, energy, alertness, confidence, and heightened sensitivity. Sometimes known as “coke” or “snow,” the drug is usually taken through the nostrils (“snorting”) and sometimes injected in combination with other drugs such as heroin (“speedballing”) or chemically converted and smoked (“freebasing”). Cocaine has a particularly strong reinforcing capability. For example, when allowed to freely self-administer cocaine rapidly, animals escalate their dosage and prefer taking it to meeting their biological and psychological needs. Repeated use can produce marked deterioration of the nervous system and general physical deterioration, destruction of the mucous membranes, paranoia, depression, and hallucination. See also “crack.”