code words

குறியீட்டுச் சொற்கள் / சங்கேத மொழி / குறியீட்டுச் சொல், மறைமொழி

தமிழ் விளக்கம்

நாகரிகம் கருதி பலர்முன் கூறத் தகாத சொற்களை மறைத்து வேறுவிதமாகக் கூறல், சபையில் அல்லது மற்றவர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும். “இடக்கர்” என்பதற்கு சொல்லக்கூடாத சொல் என்று பொருள். அமங்கள நிகழ்வை மங்களப்படுத்திக் கூறுவதும் இடக்கரடக்கலாகவே கொள்ளப்படும்.
ஒரு குழுவினருக்கு மட்டும் புரியும்படியான சொற்களுக்குப் பெயர் குழூஉக்குறி (ஆணி புடுங்குதல் = வேலை பார்த்தல்)
அபசகுனமான விஷயங்களை சுபமான வார்த்தைகளைக் கொண்டு சொல்வதற்குப் பெயர் மங்கலம் (இறைவனடி சேர்ந்தார்)
தகாத வார்த்தைகளைச் சொல்வதற்குப் பதிலாக வேறு வார்த்தைகளைச் சொல்லிப் புரிய வைப்பதற்குப் பெயர் இடக்கரடக்கல் (சிறுநீர் கழித்தேன் = ஒன்றுக்குப் போனேன்)
பிறக்காத குழந்தைகளுக்கும் உரிமை உண்டு என்று சொல்வது ஒரு குறியீட்டு வார்த்தைதான். அது கருச்சிதைவை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்ற அரசியல் நிலைப்பாடு.

English

Phrases or expressions made primarily by political office seekers and others under public scrutiny to reveal adherence to an ideology without addressing it directly. For example, a political candidate might espouse “equal rights for the unborn” as a code for opposition to abortion.