codeine

தூங்க வைக்கும் ஒருவகை மருந்து, போதை வலி நிவாரணி, ஒபியம் வகைசார்ந்த இருமல் மருந்து, தூங்கவைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படும் அபினியிலுள்ள உப்புச்சத்து

தமிழ் விளக்கம்

மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்படும் மருந்துகளில் உள்ள போதைதரும், தூங்கவைக்கும் குணமுள்ள வலிநிவாரணி. மருத்துவர்களால் சிபாரிசு தேவைப்படாமல் கடைகளில் நேரடியாக வாங்கக் கூடிய இருமல் நிவாரணிகளிலும் இந்த மருந்து கலந்துள்ளதால், இதைத் தொடர்ந்து உபயோகித்தால் இதன் மீது சார்புத்தன்மையை (அடிமைத்தனத்தை) ஏற்படுத்தும்.

English

A narcotic analgesic (pain-relieving drug) found in some prescription medications, and, in certain states, in over-the-counter medications such as some cough syrups. Like all narcotics, codeine is addictive when used with some degree of frequency.