codependency
சார்பு நிலை, சார்ந்திருத்தல்
தமிழ் விளக்கம்
இரண்டோ அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்களோ தங்களின் ஆரோக்கியமற்ற உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் உறவு முறை. உதாரணமாக ஒரு விதவைத்தாயும், அவருடைய மகளும் தாங்கள் பிறரால் உதாசீனப்படுத்தப்படலாம் அல்லது பரிகாசத்திற்குள்ளாகலாம் என்ற பயத்தினடிப்படையில் எப்போதும் உடனிருக்கும் நிலை. இது தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் நம்பிக்கையற்ற தன்மையால் எப்போதும் உடனிருக்கும் நிலை மாதிரியோ, ஒரே மாதிரியான கருத்துத் திரிபு பிணி கொண்டவர்களைப் போலவோ, அல்லது வெளித்தூண்டல்களால் உருவான மனச்சிதைவு நோய்க்கு ஆளானவர்கள் சார்ந்திருப்பதைப் போன்றதல்ல. .
English
A relationship between two or more people who rely on each other to meet and provide for reciprocal needs, particularly unhealthy emotional ones. For example, a widow and her adult daughter both lack self-esteem and are consequently fearful about contacts with others, so they meet most of their social needs by being virtually inseparable. This pattern is considered similar to but not as seriously pathological as conjugal paranoia, shared paranoid disorder, folie à deux, or induced psychotic disorder. See also adult children of alcoholics (ACOAs).