COG
அரசாங்கங்களின் கூட்டமைப்பு
தமிழ் விளக்கம்
அமெரிக்கா போன்ற சமஷ்டிக் குடியரசுகளில், மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களின் கூட்டமைப்பு. சில சமயங்களில் இவை பிராந்திய அரசாங்கங்கள் என்றழைக்கப்படுவதுமுண்டு. பிராந்தியத் திட்டமிடலுக்கும், மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி திட்டமிடலுக்கும், பிராந்தியப் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கான திட்டமிடலுக்கும், பேரிடர் தடுப்பிற்கும், நீராதாரங்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டிற்கும் இத்தைகைய கூட்டமைப்புகள் பெரிதளவும் பயன்படுகின்றது.
English
See Council of Governments (COG).