cognitive development
அறிதிற விருத்தி, அறிதல் திறன் மேம்பாடு, புலனுணர்வு மேம்பாடு
தமிழ் விளக்கம்
மனிதர்களின் உடல்ரீதியான வளர்ச்சியாலும், சுற்றுச் சூழல் தரும் அனுபவங்களாலும் அவர்கள் எப்படிப் படிப்படியாக அறிவைப் பெற்று, அதைத் தொகுத்து புரிந்துகொண்டு, தங்களுடைய உளப்பாங்கை சீரமைத்துக் கொள்ளும் முயற்சிகளையே அறிதிறன் மேம்பாடு என்கிறோம். மனிதரின் அறிதல் திறன் மேம்பாடு அவர்கள் பிறப்பிலிருந்தே தொடங்கி படிப்படியாக வளர்வதாக ஜீன் பியாஜியே (Jean Piaget 1896 - 1980) என்ற உளவியலார் நிரூபித்தார். மனிதரின் அறிதல் திறன் நான்கு நிலைகளில் ஏற்படுவதாகக் கண்டறிந்தார். அவையாவன
1. தொட்டுணர்வதால் ஏற்படும் அறிவு வளர்ச்சிப் பருவம் அல்லது புலன் இயக்கச் சிந்தனை வளர்ச்சி (sensorimotor stage birth to age two - பிறப்பிலிருந்து 2 வயது வரை). இந்தப் பருவத்தில் பல்வேறு பொருட்களை / தன்னைச் சுற்றியுள்ள உலகை மொழி உதவியின்றி புலன்களின் வழியேயும், உடலியக்கங்கள் வழியும் அறிந்து கொள்வது.
2. முற் சிந்தனை வளர்ச்சி இப்பருவத்தில் குழந்தைகள் சிந்திக்க ஆரம்பித்திருந்தாலும், எல்லாவற்றையும் தேவைகள், பயன்களுக்கு ஏற்ப பொருள் கொண்டு, மற்றவர்களின் தருக்கங்களை/ நியாயங்களை புரிந்துகொள்ளமுடியாது (pre operational stage 2 வயதிலிருந்து 7 வயது வரை)
3. பருப்பொருள் சிந்தனை வளர்ச்சி. குழந்தைகளால் உருவுள்ள ஸ்தூலமான சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், அதிலிருந்து பெறப்பட்ட அனுபவங்களிலிருக்கும், பிறரின் சிந்தனையிலிருக்கும் மறைபொருளையும், அனுமானங்களையும் புரிந்து கொள்ள இயலாது (concrete operation stage- 7வயதிலிருந்து 11 வயது வரை).
4. முறையான சிந்தனை வளர்ச்சி. இப்பருவத்தில் தருக்க (logic) அறிவையும், ஊகித்தறியும் திறனையும், ஒன்றிலிருக்கும் மறைபொருளையும் அறியும் திறன் மேம்படும்.(formal operation stage - 11 வயதிற்கு மேல்)
இந்த நான்கு நிலைகளிலும் அறிவிற்கான அடிப்படைக் கட்டுமானக் குறியீட்டுத் தொகுதிகள் (schemas) எப்படி உதவுகிறது என்பதையும், அது ஒரு வளர்ச்சி நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு எப்படி மாற்றி அமைக்கப்படுகின்றன என்பதையும் அவர் விளக்கினார்.

English
The process by which individuals acquire the intellectual capacity to perceive, evaluate, and understand information. Jean Piaget (1896–1980) formulated one of the most complete cognitive development theories to date. He divided human development into four typical stages (1) the sensorimotor stage (birth to age two); (2) the preoperational stage (ages two to seven); (3) the concrete operations stage (ages seven to 11); and (4) the formal operations stage (age 11 to adulthood). See also Piagetian theory.