cognitive dissonance

புரிதிறனில் / அறிதலில் ஏற்படும் முரண்பாடு, திகைப்பு, சுருதிபேத உளைச்சல்

தமிழ் விளக்கம்

ஒரே நேரத்தில் இரண்டோ அல்லது அதற்கு மேலோ முரண்பட்ட நம்பிக்கைகள், கருத்துக்கள், அல்லது மதிப்புகள் இருந்தாலோ அல்லது ஒரு புதுச் சிந்தனை தன்னுடைய பழைய சிந்தனைகளோடு முரண்பாட்டாலோ, தன்னுடைய நம்பிக்கைகளுக்கு சிந்தனைகளுக்கு மாறாக நடந்து கொண்டாலோ ஏற்படும் திகைப்பு. இதனால் உருவாகும் மன அழுத்தத்தால் சிந்தனை முரண்பாடுகளைக் குறைக்கவோ, முரண்பாடும் சிந்தனையைத் தவிர்க்கவோ மனிதரைத் தூண்டும் என்று உளவியலார் லியோன் பெஸ்டிங்கர் (1919 – 1989) எடுத்துரைத்தார்.

English

The mental state in which a person experiences two or more incompatible beliefs or cognitions simultaneously. In the healthy individual, this state usually leads to psychological discomfort that remains until the person acts to clarify the discrepancy.