cognitive models
மக்கள் தங்களுக்குச் சுற்றியுள்ளவைகளைப் பற்றி எந்தெந்த வகைகளில் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள, உணர்ந்து கொள்ள முயல்கிறார்கள் என்பது பற்றிய மாதிரிகள்
தமிழ் விளக்கம்
மனிதர்கள் எப்படியெல்லாம் தங்களின் அறிதல் திறனை மேம்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை ஜீன் பியாஜியோ விளக்கினார். இந்த மாதிரியான விளக்கங்களிலிருந்து பல சிகிச்சை முறைகளை வடிவமைக்கபட்டன. உதாரணமாக ஆல்பெர்ட் எல்லிஸ் போன்றவர்கள் கடைப்பிடித்த, சிந்தனையினால் ஏற்படும் நடத்தைக் கோளாறு, மனவெழுச்சிக் கோளாறு, வாழ்வியல் கோளாறு, புலனுணர்வுக் கோளாறு (rational–emotive therapy) சிகிச்சை முறைகளும், வில்லியம் கிலேசர் கடைப்பிடித்த எதார்த்தத்தை உணர வைக்கக் (reality therapy) கையாண்ட சிகிச்சை முறைகளும், ஆல்பிரட் அட்லெர் கையாண்ட மனித மைய (individual psychology) உளவியலும், சிந்தனையால் ஏற்படும் விதண்டாவாத நடத்தைக் கோளாறு போன்ற பல்வேறு சீர்கெடுகளைச் சரிசெயும் சிகிச்சை முறைகளும் இந்த விளக்கங்களிலிருந்தே உருவாயின.
English
Representations of the ways by which people come to know, perceive, or understand phenomena. Such models can be used to envision or describe how humans develop their abilities to organize knowledge and understand their worlds, as in Piagetian theory. Such models can also be used to describe certain treatment approaches, such as rational–emotive therapy (Albert Ellis), reality therapy (William Glasser), individual psychology (Alfred Adler), and rational casework (Robert Sunley and Harold D. Werner).