cognitive therapy
அறிதிறச் சிகிச்சை, புலனுணர்வு சிகிச்சை
தமிழ் விளக்கம்
மனிதர்கள் புரிந்துகொள்ளும் / அறிந்துகொள்ளும் முறைகளுக்கேற்ப, ஆல்பிரட் அட்லர் உருவாக்கிய புலனுணர்வு சிகிச்சை. நடத்தை என்பது உள்ளுணர்வினலோ, ஆழ்மனத் தூண்டுதலாலோ நடைபெறும் ஒன்றல்ல. மாறாக ஒரு மனிதன் எப்படி விசயங்களைப் புரிந்துகொள்கிறான், புரிந்துகொண்டதை எப்படி ஒழுங்கு முறைப்படுத்துகின்றான், அதன் மீது எப்படிச் செயல்படுகின்றான் என்பதைப் பொறுத்தே நடத்தை அமையுமாதலால், நடத்தையை மாற்ற, ஒரு மனிதன் அறியும், புரிந்து கொள்ளும் பாணியை மாற்றவேண்டும் என்று ஆல்பிரட் அட்லெர் (1870– 1937) என்ற உளவியலாளர் வகுத்த சிகிச்சை முறை. இது பல்வேறு சிகிச்சை முறைகளாக வடிவெடுத்துள்ளது. ஆல்பெர்ட் எல்லிஸ் போன்றவர்கள் கடைப்பிடித்த சிந்தனையினால் ஏற்படும் நடத்தைக் கோளாறு, மனவெழுச்சிக் கோளாறு, வாழ்வியல் கோளாறு, புலனுணர்வுக் கோளாறு (rational–emotive therapy) சிகிச்சை முறைகளும், வில்லியம் கிலேசர் கடைப்பிடித்த எதார்த்தத்தை உணர வைக்கக் (reality therapy) கையாண்ட சிகிச்சை முறைகளும், ஆல்பிரட் அட்லெர் கையாண்ட மனித மைய (individual psychology) உளவியலும், சிந்தனையால் ஏற்படும் விதண்டாவாத நடத்தைக் கோளாறு போன்ற பல்வேறு சீர்கெடுகளைச் சரிசெயும் சிகிச்சை முறைகளும் இந்த விளக்கங்களிலிருந்தே உருவாயின.
English
Clinical intervention using cognitive theory concepts that focus on the client's conscious thinking processes, motivations, and reasons for certain behaviors. Alfred Adler (1870– 1937) is said to have been a major originator of cognitive therapy. Current forms of this approach include rational–emotive therapy, reality therapy, existential social work, and rational casework. The psychosocial orientation of early, “pre-Freudian” social workers was considered to have much in common with the cognitive approach.