cognitive–behavioral therapies
அறிதிற நடத்தை சிகிச்சை, iபுலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை, அறியும் ஆற்றலால் ஏற்படும் நடத்தைக்கோளாறுகளுக்கான சிகிச்சை
தமிழ் விளக்கம்
அடிப்படையில் இது ஒரு உளப்பிணி சிகிச்சை முறை. எண்ணங்களும் உணர்வுகளும் மனிதரின் நடத்தையில் எவ்வளவு தூரம் செல்வாக்கு அல்லது பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று புரிந்து கொள்வதற்கு இந்த சிகிச்சை முறை உதவுகிறது. அச்ச உணர்வு, போதைப் பழக்கம், மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற உளச் சீர்கேடுகளைப் போக்க இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகின்றது. இது குறிப்பிட்ட ஒரு உளச்சிக்கலின் மீது வாடிக்கையாளரின் கவனத்தை ஈர்த்து, அதைக் கையாள உதவும் குறுகிய கால சிகிச்சை முறையுமாகும். இந்த சிகிச்சையின் போது எந்தெந்த எண்ணங்களும் உணர்வுகளும் தங்களை எப்படியெல்லாம் தொந்தரவுக்குள்ளாக்கி, எதிர்மறையான நடத்தைப் போக்குகளை உருவாக்குகின்றன என்று நோயாளிகள் புரிந்து கொள்ள உதவுகின்றது. மேலும் இது ஒத்த தன்மையுள்ள பல சிகிச்சை முறைகளை உள்ளடக்கிய பொதுப் பெயராகும். சிந்தனையினால் ஏற்படும் நடத்தைக் கோளாறு, மனவெழுச்சிக் கோளாறு, வாழ்வியல் கோளாறு, புலனுணர்வுக் கோளாறு, சிந்தனையால் ஏற்படும் விதண்டாவாத நடத்தைக் கோளாறு போன்ற பல்வேறு சீர்கெடுகளைச் சரிசெயும் சிகிச்சை முறைகளும் இதில் அடங்கும்.
English
Approaches to treatment using selected concepts and techniques from behaviorism, social learning theory, action therapy, functional school in social work, task-centered treatment, and therapies based on cognitive models. These forms of therapy are contrasted with those known as insight therapies and tend to be comparatively short term, focused on the present, and fairly limited and specific in goals. The therapist with a cognitive–behavioral orientation tends to be fairly directive and focused on the client's presenting problem.