Coit, Stanton

காயிட் ஸ்டாண்டன் (1857–1944)

தமிழ் விளக்கம்

அமெரிக்காவில் சமுதாய ஊழியரகங்களைத் (settlement house movement) தோற்றுவித்தவர். ஒழுக்கம் மற்றும் பண்பாட்டிற்கான இயக்கத்தின் (Ethical Culture Movement) தலைவர்களில் ஒருவர். லண்டன் டாயின்பீ ஹாலில் (Toynbee Hall) பெற்ற அனுபவத்தைக் கொண்டு, நியூயார்க்கில் ஏழை இளைஞர்களுக்காகத் திட்டங்களை வகுத்தார். வேலை இல்லாதவர்களுக்காக பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டுமென்றார். பரஸ்பர உதவியின் மூலம் அண்டை அயலாரும், சுற்றுப்புறத்தில் வாழ்பவர்களும் எப்படி உதவிக்கொள்ளலாம் என்பதற்கு பல முன்மாதிரிகளை வடிவமைத்துச் செயல்படுத்தினார்.

English

(1857–1944) Founder of the settlement house movement in the United States and leader in the Ethical Culture movement. He developed programs for poor youths in New York; and using his former experience at Toynbee Hall in London as his model, he developed settlements for them and others. He also advocated for public works jobs for unemployed people, developed the “mutual aid” model, and in 1891 published the book Neighborhood Guilds that described settlements.