coleadership

பகிர்ந்து கொள்ளப்பட்ட தலைமை

தமிழ் விளக்கம்

1. தலைமை என்பது உயர்நிலையில் உள்ளவர்களிடமோ அல்லது படிநிலையாக இல்லாமலோ, ஒரு குழுவில் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படும் நிலை. ஒருவரை ஒருவர் வழிநடத்திச் செல்லும் பாங்கு. இது இணைத் தலைமை, சமமட்டத் தலைமை, பலராலும் பகிர்ந்துகொள்ளப்பட்ட தலைமை, கூட்டுத் தலைமை என்று பலவிதங்களில் சுட்டப்படுகிறது.
2. சமூகக் குழுப்பணியிலும், குழு உளச்சிகிச்சை முறையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட திறத்தொழிலினர் (professionals) ஒன்றிணைந்து, தங்களின் தனித்துவமான நிபுணத்துவத்தின் அடிப்படையில் குழுவின் செயல்முறைகளை வழிநடத்தம் முறை. இது செலவுமிக்கதான செயலென்றாலும், இது நான்கு விதமான அனுகூலங்களைக் கொண்டது. 1. ஒரு குழுவின் செயல்முறைகள் பல்வேறு கோணங்களிலிருந்து பரிசீலிக்கப்படும் வாய்ப்பு. 2. ஒருவரின் வழிகாட்டலில் கொண்டுவர முடியாத நடத்தை மாற்றங்களை இணைந்து பணியாற்றுவதன் மூலம் கொண்டுவர முடியும் வாய்ப்பு. 3. கூட்டு வழிகாட்டலின் மூலம், குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு மாற்று வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் அனுகூலம். 4. குழு உறுப்பினர்களின் தெளிவையும், அவர்களுக்கான வாய்ப்புக்களின் வரம்புகளையும் விரிவாக்க முடியும் நிலை.

English

In group psychotherapy and social group work, the use of two or more professionals, each fulfilling distinct roles, to facilitate group processes. Although the procedure is generally more costly and complex, the use of coleaders for groups has four advantages: (1) they may observe different aspects of the group processes, (2) together they might bring out behaviors in members that would not occur with a single leader, (3) they can play different roles and provide role modeling opportunities for members, and (4) they can expand the range of knowledge and values available to the group.