colitis

பெருங்குடலழற்சி, பெருங்குடல் வீக்கம், குடலழற்சி

தமிழ் விளக்கம்

பெருங்குடல் அழற்சி என்பது பெருங்குடலில் மற்றும் பெருங்குடலின் பாகங்களில் (பெருங்குடல், பெருங்குடல்வாய் மற்றும் மலக்குடல்) ஏற்படும் அழற்சி மற்றும் வீக்கத்தைக் குறிக்கின்றது. பெருங்குடல் அழற்சிகள் தீவிரத் தன்மை கொண்டவையாகவோ, நாட்பட்டவையாகவோ (நெடுநாட்களாக நீடித்தவையாகவோ) இருக்கலாம். இவை செரிமான நோய்கள் என்னும் வகையில் பொதுவாக அடங்கும். பெருங்குடல் அழற்சி நோய்க்கான காரணிகள் மற்றும் அதன் போக்கு மற்றும் தன்மையைப் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும். அவையாவன வயிற்று வலி, பசியின்மை (உண்ணும் நாட்டத்தை இழத்தல்), களைப்பு, வயிற்றுப்போக்கு, தசைப்பிடிப்பு, அவசர நிலை (மலம், சிறுநீர் முக்கிக் கழித்தல்), அடிவயிற்று வலிவுணர்வு, எடை இழப்பு, குடல் இயக்கங்களில் மாற்றம் (அதிர்வெண் அதிகரித்தல்), காய்ச்சல், இரத்த ஒழுக்கு (வெளிப்படையாக அல்லது மறைந்த நிலையில்), இரத்தத்துடன் கூடிய மலம், வயிற்றுப்போக்கு, மேலும் பெருங்குடல் அக நோக்கலில் பெருங்குடலின் மென்சவ்வுகளில் செந்தடிப்பு (பெருங்குடலின் உள்பரப்பில் செந்நிறம்), புண்கள், இரத்தப் போக்கு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

English

Inflammation of the large intestine.