collaboration
இணைவு ஆக்கம், உடனுழைப்பு, கூட்டுச் செயல்பாடு
தமிழ் விளக்கம்
ஒத்திசைவான குறிக்கோள்களை அடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ அல்ல்து நிறுவனங்களோ தங்களுடைய அறிவு, ஆற்றல் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொண்டு சுழல் முறையில் (recursive) செயல்படும் கூட்டுச் செயல்பாடு. சமூகப்பணியிலும், மனித சேவைத் துறையிலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறப்புத் தொழிலினர் (professional) ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு (தனி நபர், குடும்பம், குழு, சமுதாயம்) ஒன்றிணைந்து ஆற்றும் சேவை. அவர்கள் தங்களளவில் சுதந்திரமாகச் செயல்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளரின் பிரச்சனை பற்றி கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு, அனைய (similar) சேவைகளைத் தவிர்த்தும் (avoid duplication of services) ஒரு குழுவாகச் செயல்படும் நிலை.
English
The procedure in which two or more professionals work together to serve a given client (individual, family, group, community, or population). The professionals may work relatively independently of one another but communicate and coordinate their respective efforts to avoid duplication of services, or they may work as members of a single helping team. Collaboration also takes place among social agencies and other organizations on a variety of projects. See also interdisciplinary teaming, interprofessional team, linkage, and interorganizational collaboration.