collateral monitoring
உடனிருந்து கண்காணித்தல், துணையாதரவான / ஒத்திசைவான கண்காணிப்பு
தமிழ் விளக்கம்
நேரடிச் சேவையில் ஈடுபடும் சமூகப்பணியாளர்களும், ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் சமூகப்பணியாளர்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களையோ, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மனிதர்களையோ, தாங்கள் கண்காணிப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான / துணையாதரவான மனைவி, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சகதொழிலாளி, அல்லது ஆசிரியர்களைக் கொண்டும், நடத்தை மற்றும் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்கும் முறை. இது சரிபார்ப்புப் பட்டியலைக் கொண்டோ (checklists), அன்றாட நிகழ்ச்சிக் குறிப்பேடு கொண்டோ (diaries), பிற பதிவேடுகள் கொண்டோ (logs) குறிப்பது. இது வாடிக்கையாளரின் சுய கண்காணிப்போடு இணைந்து, வாடிக்கையாளருக்கு தெரிவிக்கப்பட்டுச் செய்யப்படவேண்டும்.
English
A procedure social workers in direct practice and research use to measure client behavior and behavioral changes by having others observe and record the client's actions. Typically, the social worker has the client's spouse or other family members, friend, co-worker, or teacher do this monitoring using checklists, diaries, and logs in which the frequency of some behavior is counted. Collateral monitoring is usually used in conjunction with client self-monitoring, and it may be done overtly or unobtrusively, but it should be done only with the client's informed consent.