collective preconscious

சமூகத்தின் பொதுப்புத்தி, பொது நனவிலி நிலை, ஒவ்வொருக்குள்ளும் மறைந்திருக்கும் பொதுபுத்தி,

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட வகையான தூண்டல்களுக்கு ஒரு குழுவோ அல்லது சமூகமோ ஒரே மாதிரியாக எதிர்வினை ஆற்றும் பாங்கு. ஒவ்வொரு மனிதரிடத்திலும் அவர் அந்தரங்கம் சார்ந்த நனவிலி (unconscious) மனம் இருப்பது மாதிரி, சமூகத்தின் பொதுப்புத்தியும் உறைந்து வெளிப்படாநிலையில் இருக்கும். இது வெளிப்படுத்தப்படலாகாது என்று அடக்கி வைக்கப்பட்ட எண்ணங்களல்ல. மாறாக நம்பிக்கைகள், விதிமுறைகள், பழக்க வழக்கங்கள், கல்விப் பயிற்சியால் அடையப்பெற்ற பண்பாட்டுபேறு ஆகியவற்றால் உருவாவது.

English

Simultaneous or similar responses to a stimulus perceived on a preconscious psychological level among members of a group or society. Preconscious refers to thoughts that are unconscious at a particular moment but are not repressed or unacceptable impulses or ideas rendered unconscious. The collective preconscious is based on beliefs, norms, mores, and values acquired through the acculturation process of informal and formal education.