collective unconscious
சமூகத்தின் ஆழ்மனம், சமூகத்தின் பொதுப்புத்தி, பொது நனவிலி நிலை, ஒவ்வொருக்குள்ளும் மறைந்திருக்கும் பொதுபுத்தி
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட வகையான தூண்டல்களுக்கு ஒரு குழுவோ அல்லது சமூகமோ ஒரே மாதிரியாக எதிர்வினை ஆற்றும் பாங்கு. ஒவ்வொரு மனிதரிடத்திலும் அவர் அந்தரங்கம் சார்ந்த நனவிலி (unconscious) மனம் இருப்பது மாதிரி, சமூகத்தின் பொதுப்புத்தியும் உறைந்து வெளிப்படாநிலையில் இருக்கும். இது வெளிப்படுத்தப்படலாகாது என்று அடக்கி வைக்கப்பட்ட எண்ணங்களல்ல. மாறாக நம்பிக்கைகள், விதிமுறைகள், பழக்க வழக்கங்கள், கல்விப் பயிற்சியால் அடையப்பெற்ற பண்பாட்டுப்பேறு ஆகியவற்றால் உருவாவது.
English
In Jungian theory, that part of the unconscious that contains the inherited psychic functions or brain structure of the human species. In this theory, some information, value orientations, and behavioral patterns for meeting needs are shared by all humans through genetic transmission. In the Jungian theory, the other part of the unconscious is the personal unconscious.