colostomy
பெருங்குடல் திறப்பு, பெருங்குடலைக் கீறிச் செயற்கை முறையில் மலத்தை வெளியேற்றும் சிகிச்சை முறை
தமிழ் விளக்கம்
நான்கு அல்லது ஐந்து அடி நீளமுள்ள பெருங்குடல் ஜீரண மண்டலத்தின் முக்கிய உறுப்பாகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் மற்றும் பிற நுண்சத்துக்களைப் பிரித்து, கிரகித்து அதை வீணாக்காமல் மீண்டும் உடலுக்குள் செலுத்துவதாகும். அப்படிக் கிரகிக்கப்பட்டபின் எஞ்சியுள்ள கழிவு ஆசன வாய் வழியாக உடலிலிருந்து வெளியேற்றப்படும். பெருங்குடல் (Colon), மலக்குடல் (Rectum), அல்லது ஆசனவாய்ப் (anus) பகுதியில் நோயின் காரணமாகவோ, பிற காரணங்களால் செயல்பட முடியாநிலையிலோ, அல்லது அவ்வுருப்புகளுக்கு ஓய்வு தேவைப்படும் நிலையிலோ உடல் கழிவுகளை அகற்ற மாற்று வழி இருக்க வேண்டும். அதற்காக மருத்துவர் அடி வயிற்றில் ஒரு திறப்பு ஏற்படுத்தி குடலினை அத்துடன் சேர்த்துத் தைத்து விடுவார். இந்தத் திறப்பு, பெருங்குடல் திறப்பாய்வு (Colostomy) என்றழைக்கப்படுகின்றது. மலக்கழிவினை சேகரிக்க இந்தப் பெருங்குடல் திறப்பாய்வின் மீது ஒரு பையினை அணிந்து கொள்ள, மலம் அதில் சேகரிக்கப்பட்டு பின் அகற்றப்படும்.
English
Surgery to create an artificial anus in the abdominal wall.