committee on inquiry
விசாரணைக் கமிட்டி
தமிழ் விளக்கம்
நடந்த ஒன்றைப்பற்றி விசாரிக்க அமைக்கப்படும் குழு. இம்மாதிரியான குழுக்கள் ஒரு தொழில் அல்லது பல்தொழில் நிபுணர்களைக் கொண்டோ, தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமானதாகவோ அமைக்கப்படலாம். இந்த மாதிரியான விசாரணைக் கமிட்டிகள் பெரும்பாலும் அரசாங்கத்தாலோ, தொழில்முறை தொழிற்சங்கங்களாலோ, மூன்றாம் தரப்பு நிறுவனங்களாலோ, நுகர்வோர் கூட்டமைப்பாலோ அமைக்கப்படலாம். சமூகப்பணி சம்பந்தப்பட்ட வரையில் சமூகப்பணியாளர்கள் தொழில் நெறிமுறைகளை மீறியதைக் குறித்தோ, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதைக் குறித்தோ, சக சமூகப்பணியாளர்களுக்கிடையேயோ அல்லது பிற தொழில் நிபுணர்களுக்கிடையேயோ ஏற்பட்ட சச்சரவு குறித்தோ, சமூகப்பணியாளர்களுக்கும் அவர்தம் வாடிக்கையாளர்களுக்குமிடையே ஏற்படும் சச்சரவு குறித்தோ விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படலாம். தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம் (National Association of Social Workers - NASW), தொழில் நெறிமுறைகள் மற்றும் பணித்தரம் மீறப்படுவது / பின்பற்றப்படாதது குறித்து விசாரிக்க நிரந்தரமான ஏற்பாட்டைச் செய்துள்ளது. தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனத்துடன் இணைந்துள்ள ஒவ்வொரு கிளையிலும் விசாரணைக் குழுக்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது.
English
Permanent and ad hoc groups of professionals and others brought together to determine if any wrongdoing has been committed by or to a peer. Of particular interest to such committees are alleged violations of professional codes of ethics, illegal activities, or other disputes among professionals or between professionals and clients. These committees also exist to raise the public consciousness about mistreatment of peers by governments or political organizations. Such groups are often sponsored by professional associations, third-party organizations, or alliances of consumers. For example, the National Association of Social Workers (NASW) has a national committee for dealing with violations of the NASW Code of Ethics and personnel standards, and association standards require that each chapter maintain a committee on inquiry. See also peer review organization (PRO) and accountability.