Commodity Credit Corporation (CCC)

வேளாண் விளைபொருட்களுக்கான நிதியம்

தமிழ் விளக்கம்

(Commodity பயனுடைய பொருள், சரக்கு, பண்டம், வர்த்தகப் பொருள், விளைபொருள்) -. வேளாண் விளைபொருள் மீது கடன் வழங்கும் நிதியம் விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பதன் மூலமும், அவர்களின் விளைபொருட்களை அடமானம் வைக்க வசதி செய்து கொடுப்பதன் மூலம், குறைந்த விலைக்கு விற்காமல் கட்டுபடியாகக் கூடிய விலை வரும் வரை காத்திருந்து விற்று விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் அமெரிக்க அரசின் நிதிநிறுவனம். அறுவடைக்காலத்தில் விளைபொருட்களின் விலை குறையும் போது விவசாயிகள் இந்த நிதியத்தின் மூலம் அடமானம் வைத்து கடன் பெறலாம். சந்தையில் விலைஏற்றம் ஏற்படும்போது விளைபொருட்களை விற்றுக்கொள்ளலாம். இந்த நிதியத்தால் விளைபொருட்களின் விலை ஸ்திரப்பட்டது. இந்த நிதியத்தின் செயல்முறைகளை விமர்சிப்பவர்கள், இந்த நிதியத்தால் வேளாண் பொருட்களின் விலை செயற்கையாக அதிகரித்தது என்றும், அமெரிக்க பண்ணைப் பொருட்களை பிற நாட்டவர் வாங்குவதற்குத் தடையாய் இருக்கின்றதென்றும், பிற நாடுகளுடன் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தங்களுக்கு விரோதமாக இருக்கின்றதென்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

English

A U.S. agency that loans money to farmers, using the crop as collateral. At harvest time, if the market price falls below the previously established price supports, the farmer may turn the crop over to the CCC and keep the loaned money. If the market price is higher than the price supports, the farmer may sell the crop and repay the loan. Over the years this system stabilizes farm prices and farmer incomes and builds huge crop stockpiles. Critics say this system artificially inflates farm prices, discourages foreign buyers, and runs counter to tariff and trade agreements with other nations.