communication
தகவல் தொடர்பு, செய்தி அறிவிப்பு, கடிதப் போக்குவரத்து, செய்தித் தொடர்பு
தமிழ் விளக்கம்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பங்கேற்பாளர்களிடையே (மனிதர்கள், கருவிகள், உயிரினங்கள் அல்லது உறுப்புகள்) கருத்துக்களை, உணர்வுகளை, உள்ளக் குறிப்புகளை, மனப்பாங்கை, எதிர்பார்ப்புகளை, புலனுணர்வுகளை (perception) அல்லது கட்டளைகளை, பேச்சையோ, சைகையையோ, எழுத்தையோ, நடத்தையையோ, அல்லது மின்காந்த அலைகளையோ, இரசாயனத் தூண்டல்களையோ, அல்லது பௌதீக தோற்றப்படுகளையோ (physical phenomena) பயன்படுத்தி அர்த்தமுள்ள தகவல்கள் / விவரங்களை / செய்திகளைப் (மனதை வடிவமைக்கும் காரணி) பரிமாறிக்கொள்ளும் முறை. தகவல் பரிமாற்றத்திற்கு 1. தகவல் அனுப்புநர் 2. தகவல் / விவரம் (message), 3. செய்தியைத் தாங்கிச் செல்லும் சாதனம் / ஊடகம் (medium), 4. பெறுநர் என்ற நான்கு தளங்கள் வேண்டும். தொடர்பாடல் மூன்று நிலைகளைக் கொண்டது 1. அது அனுப்புவர் மனதில் கருத்தாக, உணர்வாகத் தோன்றும். 2. இவை குறியீடுகளாக (பேச்சு, சைகை, தூண்டல்கள்) மாற்றப்படும். 3. இக்குறியீடுகளை குறிவிலக்கம் செய்து பெறுநர் புரிந்துகொள்வார்.
English
The verbal and nonverbal exchange of information, including all the ways in which knowledge is transmitted and received.