communication disorders
தொடர்புக் கோளாறுகள்
தமிழ் விளக்கம்
மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் ஏற்படும் திறமைக் கோளாறுகள். இது பேசுவதில் ஏற்படும் கோளாறு, புரிந்துகொண்டு பதிலளிப்பதில் ஏற்படும் கோளாறு, உச்சரிப்புக் கோளாறு, திக்கிப் பேசுதல் போன்ற பல குறைபாடுகளைக் கொண்டதாகும். இது புலன் குறைபாடுகளாலும் (கேட்க இயலாமை), மூங்கையத்தாலும் (மூளை பாதிப்பால் சொற்களைப் படிக்க இயலாமை, பேச்சிழப்பு), கற்றல் குறைபாட்டாலும், பேச இயலாமை (திக்குவாய்) போன்றவற்றாலும் ஏற்படுகிறது.
English
A group of disorders classified in the DSM-IV (Washington, DC: American Psychiatric Association, 1994) as “disorders usually first diagnosed in infancy, childhood, or adolescence” and pertaining to limitations in the ability to impart information to others. The disorders that comprise this group include expressive language disorder, mixed receptive–expressive language disorder, phonological disorder, and stuttering.