Community Action Program (CAP)
சமுதாயச் செயல்பாட்டு திட்டம்
தமிழ் விளக்கம்
சமூகப் பொருளாதார உதவிகள் மூலம் வறுமையான சமூகங்களில் வறுமையையும், அதை நிலைத்திருக்க வைக்கும் காரணிகளையும் அகற்ற, மாற்று வழிகளைக் கையாள, ஏழ்மையான குடியிருப்புப் பகுதிகளில் பொருளாதார வாய்ப்புகளுக்கான அலுவலகம், 1965 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய குடியிருப்புகள் சார்ந்த திட்டம். 1964 ஆம் ஆண்டு 'வறுமைக்கு எதிரான யுத்தம்' என்ற கருத்தினடிப்படையில் தொடங்கப்பட்ட பொருளாதார வாய்ப்புக்கான அலுவலகம் செயல்படுத்திய 'ஆற்றலோடு தொடங்குவோம்' (Head Start) மற்றும் சட்ட உதவித் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, குடியிருப்புகள் சார்ந்த அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அவைகள் சுதந்திரமாகச் செயல்படவும், தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கப் புதுவழி காணவும் தூண்டப்பட்டனர். இவ்வாறு தூண்டப்பட்ட அடித்தள சமுதாய செயல்பாட்டுத் (Community Action Program) திட்டம், 3000 க்கும் அதிகமான ஏழைக் குடியிருப்புகளில் உளவளப் (counseling) பணி செய்தும், வேலை வாய்ப்புக்களுக்கான வழிகாட்டியும், சட்ட ஆலோசனை கொடுத்தும், குழந்தைகள் நலன் மற்றும் மருத்துவ சேவை செய்தும் திறம்பட செயலாற்றின.
English
The neighborhood organizations established in 1965 under the Office of Economic Opportunity (OEO). The goal of the program and its agencies was to develop the social and economic resources in poor communities and to help find alternative ways to attack the forces that perpetuate poverty. CAP originally was responsible for the Head Start program, the Legal Services Corporation (LSC), and other programs that have since been transferred to other government agencies or have disbanded. To develop a variegated series of innovations, each community action agency was at first somewhat independent of local and federal control. Subsequently, the agencies were led by elected officials with only a minority of poor people in leadership positions. CAP established about 3,000 neighborhood service centers in poor communities to provide counseling, employment placement, legal advice, and, in some, health care and child care facilities.