Community Chest

சமுதாயப் பொது நிதி. சமுதாய நிதியம், மகமை, சமூதாய உண்டியல்

தமிழ் விளக்கம்

சமுதாயப் (பொது) நிதியம் என்பது, அந்தந்தச் சமுதாயத்தில் செயல்படும் வணிக, தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி, அந்த நிதியை அந்தப் பகுதியில் பணியாற்றும் தொண்டு நிறுவனங்களுக்குத் தேவை மற்றும் முன்னுரிமையினடிப்படையில் பகிர்ந்தளிக்கும் அமைப்பாகும். இதனால் ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக நிதி திரட்டும் சிரமத்திலிருந்து விடுபட முடிகிறது. சமுதாயப் பொது நிதியம், ஐக்கிய வழி (United Way), மைய உதவி (Centraide) என்று பல பெயர்களில், ஆயிரக்கணக்கான சமுதாயம் சார்ந்த அமைப்புகள் உள்ளூர் நலத்திட்டங்கள் தொய்வடையாமல் செயல்பட கணிசமான நிதியைத் திரட்டித் தந்து அமெரிக்காவிலும், கனடாவிலும் செயல்பட உதவுகிறது.

English

An organization working for or on behalf of private social agencies in various geographic areas to raise and distribute funds through unified campaigns. The name originated in 1918, and the organization has since been renamed United Way.