community decision network
சமுதாயத் தீர்மானங்களை எடுப்பவர்கள் குழு, சமுதாய முடிவுகளை எடுப்பவர்கள் குழு
தமிழ் விளக்கம்
ஒரு சமுதாயத்தின் செயல்பாடுகளைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும், முறையாக அங்கீகரிக்கப்பட்ட அதிகாரம் கொண்ட அல்லது தங்களின் செயல்பாடுகளால் செல்வாக்கு பெற்ற நிறுவனங்களும், தனிமனிதர்களும் கொண்ட குழு. இக்குழு அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், மதத் தலைவர்கள், மற்றும் பிற சமுதாய இயக்கங்கள் உள்ளடங்கிய கூட்டமைப்பாக இருக்கும். தீர்மானிக்கப்பட வேண்டிய விசயங்களைப் பொறுத்து இந்தக் கூட்டமைப்பில் பங்கு பெறுபவர்களின் பின்னணி மற்றும் எண்ணிக்கை மாறுபடலாம்.
English
The aggregate of key organizations and individuals who have the formal or informal power to determine courses of action to be taken by a community. The decision network may include political leaders and legislative bodies, industrial leaders, religious groups, and civic associations. Its composition varies depending on the specific issue or community.